முகப்பு

சஹஜ யோகா என்பது புத்தகங்கள் வாசிப்பதோ, உடற்பயிற்சி செய்வதோ அல்ல. இது ஒரு வாழும் அறிவியல் ஆகும். இதை தெரிந்துகொள்ள ஒருவர் இதை அனுபவிக்க வேண்டும்.

சஹஜ யோகம் 1970இல், அன்னை ஸ்ரீமாதாஜி ஸ்ரீ நிர்மலா தேவி அவர்களால் தரப்பட்ட ஒரு எளிமையான தியான முறை ஆகும். இதனால் அனைத்து மனிதர்களிடமும் இருக்கின்ற தெய்வீக சக்தியான குண்டலினியை எழுப்பி விழிப்புநிலை பெறச்செய்து அதன் மூலம், நம்மையும் இவ்வுலகையும் படைத்துக் காக்கின்ற பரமசக்தியுடன் இணைய வழி செய்கிறது. இந்த பழமையான யோக முறையில் விஞ்ஞான பூர்வமான அணுகுமுறை உள்ளதால், தினசரி இதைப் பயில்வது நமது அன்றாட வாழ்வில் முழுமையான சமநிலையை ஏற்படுத்தித் தருகிறது.

நமக்குள் இருக்கும் இறைசக்தி மேலே எழும்பும் போது, நமது உடலில் உள்ள சக்கரங்கள் எனப்படும் சக்திமையங்களுக்கு ஊட்டமளித்து பராமரிக்கின்றது. சஹஜ யோக தியானத்தின் வாயிலாக இந்த சக்தி விழிப்பு நிலை அடையும் போது, நமக்கு உடலிலும், மனதிலும் உணர்விலும், ஆன்மீகத்திலும் முன்னேற்றம் ஏற்படுவதால், நல்ல ஆரோக்கியமான பலன்களைத் தருகின்றது. இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டு இருப்பதால், உலகின் பல நாடுகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறிய எளிமையான வழிகளில் சஹஜயோகா தியான பயிற்சி அளிக்க படுகிறது. தொடர்ந்து காலையிலும் மாலையிலும் செய்து வரும் போது ஆரோக்கியமான வாழ்க்கையையும் மனஅழுத்தம் அற்ற நிலைமையையும் நமக்கு தந்து உதவுகிறது. உலகின் 140 நாடுகளிலும் அனைத்து இன மக்களும் இதனை பயற்சி செய்து வருகின்றனர்.